திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று(அக்.6) அதிமுக பிரமுகர் மகன் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் ஆறுதல் தெரிவிக்க இபிஎஸ் வருகை புரிந்தார். பின்னர் முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் இல்லத்துக்கு வந்தபோது அதிமுக தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் புகைப்படம் எடுக்க திரண்டதால் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.