மடத்துக்குளம்: அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் அபாரம்!!

84பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சோழமாதேவி பகுதியில் உள்ள
அக் ஷரா வித்யா மந்த்ர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாபெரும் கலை மற்றும் அறிவியல் கண்காட்சியை பள்ளியின் அறங்காவலர் சுப்பிரமணியம் துவக்கி வைத்தார். உடன் பள்ளி தலைவர் முருகேசன் , உதவி தலைவர் சாதிக்பாட்ஷா ,
செயலாளர் சண்முக பிரியா , பள்ளி முதல்வர் ஆரோன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கண்காட்சியில் குழந்தைகள் செய்த செய்முறை மற்றும் செய்முறை மாதிரிகள், கலை சார்ந்த கலைப் பொருட்கள், ஓவியங்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக ISRO - ஆல் உருவாக்கப்பட்ட ராக்கெட்டுகளின்
மாதிரி வடிவங்கள் ,
போர்விமானம் மாணவ மாணவிகள் , பொதுமக்களின் கண்களை கவரும் வகையில் வியப்பூட்டும் விதமாக இருந்தது. மேலும் போர்விமானம் ராக்கெட்கள் முன்பு தன் படம் எடுத்து மற்றவர்களுக்கு அனுப்பி மகிழ்ந்தனர். பகத் சிலம்பம் மற்றும் களரி பயிற்சிப் பள்ளியின் பழங்காலப் போர்க்கருவிகளும் வைக்கப் பட்டிருந்தது. மேலும் பள்ளியில் நடைபெற்ற கலை அறிவியல் கண்காட்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கலந்து கொண்டு கண்காட்சியை கண்டு களித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி