திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் இன்று அக்.10 காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் இருந்த நிலையில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கோவை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். சம்பந்தப்பட்ட மடத்துக்குளம் பேரூராட்சி நிர்வாகம் மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தினர்.