மடத்துக்குளம்: அதிகாலையில் அசம்பாவிதம்... மருத்துவமனையில் பரபரப்பு

1854பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் இன்று காலை 4 மணிக்கு திடீர் புகைமூட்டம் ஏற்பட்டு நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த தலைமை மருத்துவர் அருணா குமாரி உடனடியாக நோயாளிகளை வெளியேற்றி தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதனிடையே குறிப்பிட்ட சில நோயாளிகள் பாதுகாப்பாக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு உபகரணங்களுடன் புகை மூட்டத்திற்கான காரணம் குறித்து மருத்துவமனை முழுவதும் ஆய்வு செய்தனர். அதில் கடந்த இரண்டு நாட்களாக வயிற்றுப்போக்கு காரணமாக சில நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள பகுதியில் கழிவறையை அடிக்கடி சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இதில் அதிகாலை 4 மணிக்கு தூய்மை பணியாளர் பிளிஷிங் பவுடர் மற்றும் லைசால் கொண்டு கழிவறை சுத்தம் செய்துள்ளார்.

அப்போது இதை அறியாமல் கழிவறையில் சென்ற நோயாளி அதில் தண்ணீர் ஊற்றி உள்ளார். இதனால் கெமிக்கல் ரியாக்சன் ஏற்பட்டு புகைமூட்டம் உருவாகி மருத்துவமனையில் சூழ்ந்தது தெரிய வந்தது.
தலைமை மருத்துவர் மற்றும் செவிலியர்களின் துரித நடவடிக்கையால் பெருமை விபத்து தவிர்க்கப்பட்டு நோயாளிகள் அனைவரும் பாதுகாக்கப்பட்டனர். தொடர்ந்து 7 மணி அளவில் மீண்டும் மருத்துவமனைக்குள் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி