ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினராக ஆடிட்டர்

52பார்த்தது
ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினராக ஆடிட்டர்
தென்னக ரயில்வே மதுரை டிவிசனுக்கு உட்பட்ட உடுமலை ரயில் நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினராக திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் கொழுமம் ஊராட்சியை சேர்ந்த ஆடிட்டர் ஏ. வடுகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை டிவிசன் வணிகப் பிரிவு துணை மேலாளர் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஏ. வடுகநாதன் பாரதீய ஜனதா கட்சி திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளராகவும், மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி அமைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இவருக்கு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி