முத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பருவ காலப் புயல், மழை, வெள்ளம், வீட்டு சமையல் எரிவாயு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, கோடை, வெயில் காலங்களில் தீ விபத்து ஏற்படும் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தீ தடுப்பு விழிப்புணர்வு செயல் விளக்கம் மற்றும் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் வேல்முருகன் தலைமை தாங்கினார். முகாமில் வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் பிரபாகரன் தலைமையில் பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி செய்து காண்பிக்கப்பட்டது.