சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சைபர் கிரைம் பிரிவின் தூதுவர்களாக பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் நியமிக்கப்படும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. சைபர் குற்றப்பிரிவின் கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் சந்தீப் மிட்டல் ஐ.பி.எஸ். சைபர் கிரைம் பிரிவின் தூதுவர்களாக பெண் ஆட்டோ ஓட்டுநர்களை இணைத்து 1930 ஹெல்ப்லைன் எண்ணை பிரபலப்படுத்துவதற்காக அவர்களின் ஆட்டோ ரிக்ஷாக்களில் அந்த எண்ணை ஒட்டி துவக்கி வைத்தார்.