சிவன்மலை கோவில் படிக் கட்டில் படியேறிய பாம்பு

55பார்த்தது
காங்கேயம்  சிவன்மலை பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலமாக விளங்கி வருவது 
சிவன்மலை சுப்பிரமணிய 
சுவாமி திருக்கோயில்.  இக்கோவிலில் முருகன் சுப்பிரமணிய சுவாமியாக வள்ளி,  தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.  இக்கோவில் அறநிலைத்துறை கட்டுபாட்டில் 
இயங்கி வருகிறது.  தினசரி பல்லாயிரம் கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் இந்த மலையில் அறியவகை தாவரங்கள் மரங்கள் மற்றும் சிறு சிறு 
உயிரினங்களான பல்லி,  
பாம்பு,  உடும்பு,  கீரி மற்றும் 
பறவைகள் ஆகியவை வாழ்ந்து வருகின்றன.  இந்த 
நிலையில் நேற்று முன்தினம் மலைக் கோவில் படிக்கட்டில் ஏராளமான பக்தர்கள் படியேறி கொண்டிருந்த நிலையில் இவர்களுடன் சுமார் 5 அடி நீளம் கொண்ட பச்சை  பாம்பும் படியேறி சென்றது.  இதை கண்ட பக்தர்கள் பயந்து கொண்டு நகர்ந்து சென்று படியேறினர்.  மேலும் சிலர் 
சிறிது நேரம் இந்த காட்சியை கண்டு களித்தனர்.  இதனை அடுத்து இந்த பாம்பு படிக்கட்டில் இருந்து திசை மாறி மலைகளில் உள்ள செடி கொடிகளுக்குள் சென்றுவிட்டது.  இதனை படம்பிடித்து சிலர் 
வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.  மேலும் 
அரியவகை விலங்குகள் 
மற்றும் விச ஊர்வனங்கள் தென்படும் பட்சத்தில் இதனை பிடித்து பாதுகாப்பான காப்புக்காட்டு பகுதியில் கொண்டு சென்று விட 
வேண்டும் என வனத் துறையினருக்கு பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி