உலக சித்தர்கள் மாநாடு 2024 தாராபுரம்

61பார்த்தது
உலக சித்தர்கள் ஞான பீடம் நடத்தும் ஐந்தாவது உலக சித்தர்கள் மாநாடு 2024 நாள் 27/7/2024 சனிக்கிழமை முதல் 28 7 2024 ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற உள்ளது. அமைச்சர்கள் சாமிநாதன் அவர்களும் மற்றும் கயல்விழி செல்வராஜ் அமைச்சர் அவர்களும் பங்கேற்கின்றனர் நாளை மறுநாள் நடக்கும் நிகழ்ச்சிகளில் பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் அவர்களும் மற்றும் தமிழகமெங்கும் இருந்து சிவனடியார்கள் மடாதிபதிகள் துறவிகள் பங்கேற்கின்றனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் அருகில் கோகுல் மஹாலில் நடைபெற இருக்கிறது

மாநாட்டில் 5 லட்சம் ருத்ராட்சங்களால் உருவாக்கப்பட்ட சிவலிங்கத்துக்கு நடக்கிறது. தமிழகமெங்கும் இருந்தும் சிவனடியார்கள் மடாதிபதிகள் துறவிகள் பங்கேற்கின்றனர். இந்த நாட்டிற்கான ஏற்பாடுகளை உலக சித்தர்கள் ஞான பீடத் தலைவர் ரத்தினமாணிக்கம் சித்தர் அவர்களும் மாநில செய்தி தொடர்பாளர் செந்தில்குமார் அவர்களும் பதினெண் சித்தர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மைய நிறுவனர் டாக்டர் கணபதி அவர்களும் மற்றும் சிவனடியார்கள் தன்னார்வலர்கள் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி