அமலாக்கத்துறை சோதனைக்கு மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் மகனும், வேலூர் எம்.பி.யுமான கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்ய காத்திருக்கிறனர். வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரில் உள்ள வீட்டிலும், அவருக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசனின் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய காலை முதலே காத்திருக்கின்றனர்.