தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ஓல்ட் டவுன், மதன்னப்பேட்டை, உப்பரகுடாவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் பேருந்து கேரளாவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பம்பை ஆற்றில் இருந்து சிறிது தொலைவில் உள்ள சாலை தடுப்பில் மோதிய பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து நின்றது. இந்த விபத்தில் டிரைவர் ராஜூ என்பவர் உயிரிழந்தார், மேலும் பலர் காயமடைந்துள்ளனர். துரிதமாக செயல்பட்ட அப்பகுதி மக்கள், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.