அமெரிக்க அதிபராக வெற்றி பெற்றுள்ள டொனால்ட் ட்ரம்புக்கு சொந்தமான ஹோட்டலின் நுழைவாயிலில் டெஸ்லாவின் Cybertruck கார் வெடித்துச் சிதறியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 7 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், இதற்கும் வாகனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என டெஸ்லா CEO எலான் மஸ்க் கூறியுள்ளார். காருக்குள் இருந்த பெரிய பட்டாசுகள் அல்லது வெடிகுண்டுகளால் வெடிக்க வைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.