மன்னார்குடியில் இருந்து சென்னை செல்லும் மண்ணை எக்ஸ்பிரஸ் ரயிலில் மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் கருணாநிதி என்ற நபர் பயணித்துள்ளார். அப்போது நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் ஏறிய போலீசார் உள்பட 3 பேர் கதவை திறக்கச்சொல்லியும், அவர்கள் கதவை திறக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், திருவாரூரில் ரயில் நின்ற போது உள்ளே வந்த காவலர் பழனி, கருணாநிதியை தாக்கியுள்ளார். தற்போது கருணாநிதி அளித்த புகாரின் பேரில் காவலர் பழனி மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.