கால்சியம் உடலுக்கு இன்றியமையாத ஒன்றாகும். பாலில் அதிக கால்சியம் சத்து உள்ளது. ஆனால் பலருக்கும் பால் குடிக்க பிடிக்காது. பாலை விரும்பாதவர்கள் அத்திப்பழம், எள், பாதாம், மத்தி மீன், ஆரஞ்சு, சியா விதைகள், கேழ்வரகு போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இந்த உணவுகளில் பாலை காட்டிலும் அதிக கால்சியம் நிரம்பியுள்ளது. கால்சியம் சத்து எலும்புகள், மூட்டுகள், பற்கள் போன்றவைகளுக்கு ஆரோக்கியம் அளிக்கிறது.