காங்கேயம்: கொள்ளையர்களை பிடித்த காவலர்கள்

82பார்த்தது
காங்கேயம்: கொள்ளையர்களை பிடித்த காவலர்கள்
காங்கேயம் பாரதியார்நகர் சக்திநகரில் கடந்த மாதம் 2ம் தேதி அதிகாலை 7 வீடுகளில் பூட்டை உடைத்து பணம் பல லட்சம், நகை 30 பவுன் கொள்ளை சம்பவம் நடைபெற்றது.

கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. கொள்ளையர்கள் கையில் கடப்பாரை போன்ற ஆயுதங்களுடன் கொள்ளையில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. உடுமலை, தாராபுரத்தில் இதே பாணியில் கொள்குறிப்பிடத்தக்கது.

இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா மேற்பார்வையில் 2 டிஎஸ்பி, 3 ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் என 3 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதலுக்கு பின் 20ம் தேதி குற்றவாளிகள் கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருகன், ராஜா, சுரேஷ், தங்கராஜ் 4 பேரை சட்டிஸ்கரில் கைது செய்து 32 சவரன் நகை 2 இருசக்கர வாகனங்கள், ஸ்கர்ப்பியோ ஜீப் பறிமுதல் செய்தனர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் முழுவதும் இந்த கொள்ளையர்களை பிடித்த காவல் துறையினர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா மற்றும் பொதுமக்கள் பாராட்டி வந்த வேளையில் கோவை மண்டல காவல் துணை தலைவர் சரவணா சுந்தர் தனிப்படையில் செயல்பட்ட காவலர்களை நேரில் வரவழைத்து பாராட்டு தெரிவித்தார். ஆய்வாளர் விவேகானந்தன், உதவி ஆய்வாளர் சந்திரன் இந்த தனிப்படையில் செயல்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்தி