அமைச்சர் கயல்விழி கனவு இல்லம் திட்டம் ஆணைகளை வழங்கினார்!

75பார்த்தது
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் அரிமா அரங்கத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் தாராபுரம், மூலனுார் மற்றும் குண்டடம் ஆகிய ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 462 பயனாளிகளுக்கு ரூ9. 79 கோடி மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்ல திட்ட வீடுகள், ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டப்பணிகளுக்கான ஆணைகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.

அமைச்சர் கயல்விழி தெரிவிக்கையில்: -
தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 39 பயனாளிகளுக்கு தலா ரூ. 3. 50 இலட்சம் மதிப்பீட்டிலும், மூலனுார் ஊராட்சி பயனாளிகளுக்கு தலா ரூ. 3. 50 இலட்சம் மதிப்பீட்டிலும், குண்டடம் ஊராட்சி பயனாளிகளுக்கு தலா ரூ. 3. 50 இலட்சம் மதிப்பீட்டிலும், மதிப்பீட்டில் ரூ. 1. 36 கோடி ஒன்றியத்திற்குட்பட்ட 40 மதிப்பீட்டில் ரூ. 1. 40 கோடி ஒன்றியத்திற்குட்பட்ட 170 மதிப்பீட்டில் ரூ. 5. 95 கோடி தொகுப்பு வீடுகள் பராமரிப்புக்கு 213 பயனாளிகளுக்கு ரூ. 1. 08 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 462 பயனாளிகளுக்கு ரூ. 9. 79 கோடி மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்ல திட்ட வீடுகள், ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டப்பணிகளுக்கான ஆணைகளையும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் வழங்கப்பட்டுள்ளது என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி