திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள மூலனூர் பகுதியில் பல்வேறு வீடுகளில் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் கோவையைச் சேர்ந்த அனந்தகுமார் என்பவனை மூலனூர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ஆறு பவுன் நகைகளை மீட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரான அருண்குமார் என்பவரை காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். மேலும் இருவரும் கூட்டுச்சடியில் ஈடுபட்ட பல்வேறு கொள்ளை வழக்குகளை போலீசார் இதன் மூலம் முடித்து வைத்தனர்.