கொடுமுடியைச் சேர்ந்தவர் சத்யா வயது 30 இவருக்கும் திருமணத்திற்கு பெண் பார்த்து வந்த தாராபுரத்தைச் சேர்ந்த பேக்கரி உரிமையாளர் ஒருவருக்கும் இடையே செல்போன் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதை அடுத்து இருவரும் பழனி அருகே ஒரு கிராமத்திற்கு சென்று அங்குள்ள கோவில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் தம்பதி இருவரும் தாராபுரம் வந்து குடும்பம் நடத்தினர். அப்போது சத்யாவின் நடத்தையில் அவரது கணவருக்கு சந்தேகம் இருந்தது. இதனால் சத்யா மீது தாராபுரம் காவல் நிலையத்தில் அவரது புது கணவர் புகார் செய்தார். போலீசார் சத்யாவை அழைத்து விசாரித்த போது அவர் சிறிது நேரத்தில் வருகிறேன் என்று கூறிவிட்டு தலைமறைவானார். அதன் பின்னர் காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து தலை மறைவாக இருந்த சத்யாவைப் பிடித்து வந்து விசாரித்தனர். விசாரணையில் சத்திய சென்னை சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதும். அடுத்து கரூரில் சேர்ந்த உதவி ஆய்வாளர் கரம்பிடித்ததும். பின்னர் மாட்டு வியாபாரி ஒருவரை ஏமாற்றி பணம் பெற்றதும். அடுத்து மற்றொரு வாலிபரை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி குழந்தை பெற்ற திடுக்கிடும் தகவல் தெரிகி வந்தது. இவருக்கு உதவியாக இருந்த பெண் புரோக்கர் கரூர் மாவட்டம் காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவரை நேற்று தாராபுரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்