அவினாசியை அடுத்து எம். நாதம்பாளையத்தை சேர்ந்தவர் அருள்தாஸ் (வயது45). தையல் தொழிலாளி. இவர் ஒரு புரமோட்டர்ஸ் நிறுவனத்தில் கடந்த 2021 -ம் ஆண்டு வீட்டு மனை வாங்கி வீடு கட்டி தரும் திட்டத்தில் சேர்ந்து ரூ. 42 லட் சம் முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் போட்டுள்ளதாக கூறப்ப டுகிறது. இதற்கிடையில் புரமோட்டர்ஸ் நிறுவனத்தினர் இவ ருக்கு விற்பனை செய்வதாக கூறப்பட்ட இடத்தை வேறொருவருக்கு கிரையம் செய்துள்ளதை அறிந்து அருள்தாஸ், புர மோட்டர்ஸ் நிறுவனத்திடம் பணத்தை கேட்டுள்ளார். அப்போது சாதியை சொல்லி இடத்தை விற்பனை செய்ய முடியாது என்று கூறி கொடுத்த பணத்திற்கு 2 காசோலைகள் கொடுத்துள்ளனர். ஆனால் வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்துள்ளது.
இதுகுறித்து அவினாசி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி அவினாசி போலீஸ் நிலையம் முன்பு குடும்பத்துடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக இன்ஸ்பெக்டர் ராஜவேல் உள்ளிட்ட போலீசார் அவர்களை அழைத்து 2 நாட்களுக்குள் பணத்தை அந்நிறுவனத்திலிருந்து பெற்று தருவதாக உறுதி அளித்தத பின் போராட்டத்தை கைவிட்டனர்.