திருப்பூர் நெருப்பெரிச்சலை அடுத்த ஜி. என். கார்டன் பகுதியில் முத்துக்குமார் என்பவர் பின்னலாடை நிறுவனம் நடத்தி வருகி றார். நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் நிறுவனம் மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 11 மணிக்கு மேல் பின்னலாடை நிறுவனத்தின் உள்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீ மள, மளவென கட்டிடம் முழுவதும் பரவியது.
இதை பார்த்த காவலாளி உடனடியாக நிறுவனத்தின் உரிமை யாளர் முத்துக்குமார் மற்றும் திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அங்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் கட்டிடம் முழுவதும் பனியன் துணிகள் மற்றும் பனியன்கள் இருந்ததால் தீ கொழுந்து விட்டு எறிந்தது.
பலகோடி ரூபாய் பொருட்கள் நாசம்இதையடுத்து திருப்பூர் தெற்கு, அவினாசி மற்றும் ஊத்துக் குளி உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீய ணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. மேலும் 10-க்கும் மேற்பட்ட தனியார் தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு சுமார் 4 மணி நேரம் போராடி தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.