சேலம் மாவட்டத்தில் தாயின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடித்து கொன்ற 2 மகன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் அருகே வேறு ஒரு நபருடன் அடிக்கடி செல்போனில் பேசியதால் தாயின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடித்து கொன்றதாக இரண்டு மகன்களை போலீசார் கைது செய்தனர். தாய் வசந்தியிடம் நேற்று (பிப்.17) வாக்குவாதம் செய்த மகன்கள், அவரை சரமாரியாக தாக்கியதில் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.