நடிகர் ராமராஜன் விவாகரத்து குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், "சினிமாவில் நடிக்க கூடாது என்று நளினியிடம் தெளிவாக கூறிவிட்டுத்தான் திருமணம் செய்தேன். அப்போது நடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்தார்கள். ஆனால், நளினி மீண்டும் நடிப்பேன் என்று சொன்ன போது தான் பிரச்சனையே வந்தது. இதனால், இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டோம்" என்று கூறியுள்ளார்.