அவினாசி: நாளை மின்தடை பகுதிகள்

51பார்த்தது
அவினாசி: நாளை மின்தடை பகுதிகள்
அவினாசி மற்றும் வீரபாண்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (சனிக்கிழமை) இந்த துணை மின் நிலையங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. 

அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அவினாசி துணை மின் நிலையத்துக்குட்பட்ட அவினாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூர், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, சீனிவாசபுரம், முத்துசெட்டிபாளையம், காமராஜ்நகர், சூளை, மடத்துப்பாளையம், சேவூர் ரோடு, வ. உ. சி. காலனி, கிழக்கு, மேற்கு, வடக்கு ரதவீதிகள், அவினாசி கைகாட்டிபுதூர், சக்தி நகர், ராயம்பாளையம், எஸ். சி. அப்பேரல், குமரன்காலனி, ராக்கியாபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. 

இதுபோல் வீரபாண்டி, சி. ஜி. புதூர், ஆண்டிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களுக்குட்பட்ட வீரபாண்டி, பாலாஜிநகர், முருகம்பாளையம், சுண்டமேடு, பாரதிநகர், நொச்சிபாளையம், குளத்துப்பாளையம், கரைபுதூர், குப்பாண்டம்பாளையம், ஆண்டிபாளையம், முத்துநகர், சின்னாண்டிபாளையம் கிழக்குபகுதி, ராஜகணபதிநகர், இடும்பன்நகர், ஜீவநகர், சின்னியகவுண்டன்புதூர், கே. என். எஸ். நகர், ஆர். கே. காட்டன் ரோடு, காமாட்சி நகர், செல்லம் நகர், வஞ்சிப்பாளையம் ஆகிய பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின் வாரிய செயற்பொறியாளர்கள் பரஞ்ஜோதி, சண்முகசுந்தரம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி