அவினாசி ஏல மையத்திற்கு பருத்தி வரத்து அதிகரிப்பு

67பார்த்தது
அவினாசி ஏல மையத்திற்கு பருத்தி வரத்து அதிகரிப்பு
அவினாசி ஏலமையத்திற்கு பருத்தி வரத்து அதிகரிப்பு

அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரம் தோறும் புதன்கிழமை பருத்தி ஏலம் நடை பெறும். அதன்படி நடந்த பருத்தி ஏலத்திற்கு 1, 020 பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டிருந்தது. இது கடந்த வாரத்தை காட்டிலும் 110 மூட்டைகள் அதிகம். இதில் ஆர். சி. ஹெச். ரக பருத்தி குவின்டால் ரூ. 6000 முதல் ரூ. 7171 வரையிலும், மட்ட ரக பருத்தி குவிண்டால் ரூ. 2000 முதல் ரூ. 3000 வரையிலும் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர். ஏலத் தின் மொத்த மதிப்பு ரூ. 21 லட்சத்து 58 ஆயிரம். இந்த தக வலை சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி