ஜி. கே வாசன் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

576பார்த்தது
நீலகிரி தொகுதியின் மக்களின் அன்பை பெற்று அவர்களின் பிரச்சனைகளை நன்கு அறிந்தவர். பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்பதற்காக நீலகிரி தொகுதியின் வரைபடத்தை அறிந்து தெரிந்து புரிந்து செயல்படுத்தக்கூடிய வேட்பாளர். குறிப்பாக மத்திய அரசுக்கு ஒத்த கருத்துடைய வேட்பாளர் எல் முருகன். இன்றைக்கு தி. மு. க வின் தவறான செயல்பாடுகளுக்கு இந்த தொகுதியிலே முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய சரியான வேட்பாளர்.
சிறுபான்மை பிரிவு, SC, ST மக்களால் அன்பு பாராட்டப்பெற்ற வேட்பாளர்.
கூட்டணி கட்சி தலைவர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்ற வேட்பாளர். மத்தியிலே மோடி அரசு சிறப்பாக பணியாற்றி வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக்கு பிறகு இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றும். நமது வேட்பாளரின் வெற்றி நமது தொகுதியினுடைய வளர்ச்சியாக
இருக்க வேண்டும்.
ஆகவே பொதுமக்கள் மற்றும் தாய்மார்கள் வியாபார பெருமக்கள் அனைவரும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன் என்றார். சேவூர் பகுதியில் வாக்கு சேகரிப்பின் போது கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி