மோட்டார் வாகன அலுவலகம் அடிக்கல் நாட்டு விழா

51பார்த்தது
மோட்டார் வாகன அலுவலகம் அடிக்கல் நாட்டு விழா
மோட்டார் வாகன அலுவலகம் அடிக்கல் நாட்டு விழா

அவினாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையம் ஊராட்சி பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் கட்டுவதற்காக அப்பகுதி யைச் சேர்ந்த சுப்பிரமணியம், பழனிசாமி, பிரபு ஆகியோர் 2 ஏக்கர் நிலம் தானமாக வழங்கினர். அந்த இடத்தில் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டிடம் கட்ட நகராட்சி நிறுவார்கத் துறை அமைச்சர் கே. என். நேரு தலைமையில் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்பூரிலி ருந்து நேற்று அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியின் போது அவினாசி வட்டார போக்கு வரத்து அலுவலகம் கட்டும் இடத் தில் ஆர். டி. ஓ. ஆனந்த், அவினாசி மோட்டார் வாகன ஆய்வா ளர் பாஸ்கர், திருப்பூர் வடக்கு வட்டார ஆய்வாளர் செந்தில் ராம், காங்கயம் ஆய்வாளர் ஈஸ்வரன், வேலாயுதம்பாளையம் ஊராட்சி தலைவர் சாந்தி வேலுசாமி, துணைத் தலைவர் விஜ யலட்சுமி விஜயேந்திரன், வார்டு உறுப்பினர்கள், ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்துனர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி