திருப்பூரில் எல் முருகன் சாமி தரிசனம்

73பார்த்தது
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புதறை , பாராளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் எல். முருகன் இன்று திருப்பூர் அம்மாபாளையம் பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீபுரம் ஜெகன்மாதா ஶ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புதுறை, பாராளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் எல். முருகன் வந்தார். அதன் ஒரு பகுதியாக இன்று காலை அம்மாபாளையம் பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீபுரம் ஜெகன்மாதா ஶ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் திருக்கோயிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு கோவில் சார்பில், மாலை அணிவித்து கும்ப மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோயில் வளாகத்தை சுற்றிப் பார்த்தார். கோயில் சிற்பங்களை கண்டு ரசித்து அது குறித்து கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து சாமி தரிசனம் செய்தார். பின்னர் பாஜக நிர்வாகிகள் சந்தித்து திருப்பூர் மாவட்டம் முழுவதும் மத்திய அரசின் நலத்திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் சென்றடைகிறதா என்பதை உறுதி செய்ய கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து திருப்பூர் நல்லூர் பகுதியில் புதிதாக அமைந்துள்ள தனியார் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை கடையை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். மேலும் கட்சி நிர்வாகிகள் தொழில் முனைவோர்களை சந்தித்து பேசினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி