கார்த்தியின் ‘வா வாத்தியார்’ ரிலீஸ் எப்போது?

77பார்த்தது
கார்த்தியின் ‘வா வாத்தியார்’ ரிலீஸ் எப்போது?
நடிகர் கார்த்தியின் 26வது படமான ‘வா வாத்தியார்’ படத்தை நலன் குமாரசாமி இயக்கியுள்ளார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கிரித்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தை வரும் கிறிஸ்துமஸ் (டிச.26) அன்று வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நலன் குமாரசாமி சூது கவ்வும், காதலும் கடந்து போகும் போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.

தொடர்புடைய செய்தி