100 அடி ஆழ கிணற்றில் நீரில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவன் பலி

56பார்த்தது
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து சாவக்கட்டுப்பாளையம், வெள்ளமடை பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. கொத்தனாராக வேலை செய்து வரும் இவரது மகன் கௌதம் (15) சாவக்கட்டுப்பாளையம் அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
வழக்கம் போல பள்ளிக்குச் சென்று மாலை ஊர் திரும்பிய கெளதம், வீட்டுக்குப் போகாமல் ஸ்கூல் பேக்குடனேயே தனது நண்பர்களுடன் ஊர் கிணற்றில் நீச்சல் பழக சென்றுள்ளார்.
நூறு அடிக்கும் மேல் ஆழம் உடைய அந்த கிணற்றில் சுமார் எழுபது அடிக்கும் மேல் தண்ணீர் உள்ளது.
இந்நிலையில், இடுப்பில் பிளாஸ்டிக் தண்ணீர் கேனை கட்டிக் கொண்டு நீச்சல் பழகிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இடுப்பில் கட்டப்பட்டிருந்த தண்ணீர் கேன் கழண்டு விட்டதால் கௌதம் கிணற்று நீரில் மூழ்கியுள்ளார்.
உடனடியாக, உடன் இருந்த நண்பர்கள் கூச்சலிட்டதை அடுத்து அக்கம்பக்கத்தினர் வந்து முயற்சி செய்தும் பலனின்றி கெளதம் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வீரர்கள் ஐந்து பேர் கொண்ட குழு கௌதமின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். நூறு அடி ஆழ கிணறு என்பதால் மீட்பு பணியில் சவால் ஏற்பட்டது.
சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போராடி மின் விளக்குகள் வெளிச்சத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் வீரர்கள் கௌதம் உடலை தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி