சென்னை விமான நிலைய வளாகத்தில் இரு சக்கர வாகனங்களுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் பயணிகளை வழியனுப்ப, வரவேற்க வந்தவர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும், அதிகாரப்பூர்வமாக எந்த உத்தரவும் வராத நிலையில், பார்கிங் மேலாண்மை செய்யும் Stalwart நிறுவன ஊழியர்கள் இரு சக்கர வாகனங்களை உள்ளே வரக்கூடாது என தடுப்பதாக பயணிகள் புகார் அளித்துள்ளனர்.