பிஜேபி நிர்வாகி வீட்டில் ரூ. 31 லட்சம் பணம் பறிமுதல்

4007பார்த்தது
வெள்ளகோவில் தீத்தாம்பாளையம் பிஜேபி உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு மாவட்ட செயலாளர் ஜவஹர் வீட்டில் உரிய ஆவணமின்றி பணம் வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. ‌

அதன் அடிப்படையில் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. வீட்டில் வைத்திருந்த ரூ. 31, 74, 200 ரொக்கப் பணம் கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் பணம் ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாருக்கு சொந்தமான பணமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அசோக்குமார், ஜவஹர் நண்பர் என்பதால் கோவில் திருப்பணிகள் செய்வதற்கு இந்த பணத்தை கொடுத்து வைத்திருந்ததாகவும் தகவல். ரொக்கப் பணத்தை திருப்பூர் மாவட்ட வருமான வரித்துறைத்தினர் காங்கேயம் வட்டாச்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமார், வட்டாச்சியர் மயில்சாமி முன்னிலை எண்ணப்பட்டு‌ வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஜவஹர் தெரிவித்ததாவது, வீட்டில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் வீட்டிலிருந்து இரண்டு வருட காலமாக எங்கள் பகுதியில் கோயில் கட்டுவதற்காக சேர்த்து வைத்திருந்த சுமார் 28 லட்சம் ரொக்க பணத்தையும், எனது சொந்த செலவிற்காக வைத்திருந்த சுமார் 3. 5 லட்சம் ரொக்க பணத்தையும் முறையற்ற பணம் என கருதி எனது வீட்டிலிருந்து எடுத்துச் சென்றுள்ளனர். இந்த தொகை கடந்த 2 வருட காலமாக கோயில் கட்டுவதற்காக சேர்த்து வைத்திருந்து, இந்த பணத்திற்கும் தேர்தலுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்றார்.

தொடர்புடைய செய்தி