குவாட்டருக்கு ரூ.10 அதிகம் கேட்கும் டாஸ்மாக் ஊழியர்: வீடியோ வைரல்

2641பார்த்தது
பெருமாநல்லூர் சந்தை கடை எதிரே உள்ள கடை எண் 1948 டாஸ்மாக் கடையில் குவாட்டருக்கு ரூபாய் பத்து அதிகம் கேட்கும் வீடியோ படு வைரலாகி வருகிறது.

திருப்பூர் ஒன்றியம் பெருமாநல்லூர் வாரச்சந்தைக்கு எதிரே அமைந்துள்ள டாஸ்மாக்கில் தொழிலாளி ஒருவர் குவாட்டர் மதுபானம் கேட்கிறார். மதுவாக வந்த தொழிலாளி தன்னிடம் மது பாட்டிலுக்கு உண்டான தொகை 140 மட்டுமே இருப்பதாகவும் மேற்கொண்டு பத்து ரூபாய் தன்னிடம் இல்லை ஆகவே எனக்கு மது தாருங்கள் என கேட்கிறார். ஆனால் ரூபாய் பத்து அதிகம் தந்தால் மட்டுமே மதுபானம் தருவேன் என டாஸ்மார்க் ஊழியர் சொல்கிறார்.

பத்து ரூபாய் குறைவாக கொடுத்ததால் கொஞ்சம் கூட மனம் இறங்காத ஊழியர் பத்து ரூபாய் இருந்தால் குவாட்டர் இல்லையேல் கிளம்பு என்கிற தொனியில் கருணை இல்லாமல் பேசுகிறார். டாஸ்மாக் ஊழியரின் கல்நெஞ்சம் தொழிலாளியின் பரிதாப நிலை ஒரு புறம் இருக்க குவாட்டருக்கு பத்து ரூபாயும், ஆஃப்புக்கு ரூ. 20 ரூபாயும் புல்லுக்கு 40 ரூபாயும் யாராக இருந்தாலும் தர வேண்டும் என எழுதப்படாத விதியாக தைரியமாக செயல்படுகிறார்கள். இது போன்ற அராஜகங்களை தட்டிக் கேட்பது யார் என்று வேதனையுடன் குடிமகன்களும், சமூக ஆர்வலர்கள் புலம்புகின்றனர்.

தொடர்புடைய செய்தி