நெட் தேர்வு தேதி மாற்றம்.. காரணம் இதுதான்

80பார்த்தது
நெட் தேர்வு தேதி மாற்றம்.. காரணம் இதுதான்
கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர், பணிக்கான தகுதியையும், இளநிலை ஆராய்ச்சியாளர்களுக்கு உதவித்தொகை தர நெட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. 2024ஆம் ஆண்டுக்கான ஜூன் மாதம் 16 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி உள்ளிட்ட குடிமைப் பணியிடங்களுக்காக (UPSC) மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் முதல் நிலைத் தேர்வு ஜூன் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால், தேர்வர்களின் கோரிக்கைக்கு இணங்க, ஜூன் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.