சிறுமியை காதலித்து கடத்த முயன்றதாக போக்சோவில் கைதாகி ஜாமீனில் வந்த காதலனை தேடி வந்த சிறுமியை திருப்பி அனுப்ப பேருந்தில் அழைத்து வந்த போது சிறுமி செல்ல மறுத்ததால் பஸ்ஸிலேய தனது கைய பிளேடால் கீறிக்கொண்ட வாலிபரால் பரபரப்பு. அவிநாசி போலீசார் சமரசம் செய்தனர்.
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் ராவ் மற்றும் ராணி பாய் தம்பதியரின் மகளான 17 வயது சிறுமி, பத்தாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு, திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி அருகே உள்ள அண்ணாநகர் பகுதியில் உள்ள தனது மாமா வீட்டில் வசித்து வந்துள்ளார்.
அதே பகுதியில் புதுக்கோட்டையைச் சேர்ந்த மணிகண்டன் மகன் சந்தோஷ் (24) என்பவர் தங்கி கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.