1, 025 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
மோட்டார் சைக்கிள் பறிமுதல்
திருப்பூர் அருகே ராமையாகவுண்டன்பாளை யம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவ தாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புல னாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் இன்ஸ்பெக்டர் துளசிமணி வழிகாட்டுதலில் சப்-இன்ஸ்பெக் டர்கள் கிருஷ்ணன், பொன்குணசேகரன் ஆகி யோர் ராமையாகவுண்டன்பாளையத்தில் வாகன சோதனை செய்தனர்.
அப்போது அந்த ரோட்டில் இரு சக்கர வாக னத்தில் மூட்டைகளுடன் வந்தவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவரிடம் விசாரித்ததில், அவர் திருப் பூர், அவினாசி ரோடு காந்திநகரை அடுத்தபத்மாவதிபுரம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து (வயது 38) என்பதும் அவர் சுற்றுவட்டார பகு திகளில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு வடமாநிலத்தவர் களுக்கு விற்பனை செய்ய கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 1, 025 கிலோ ரேஷன் அரிசி, இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறி முதல் செய்தனர்.