ஹரியானா: புடானா கிராமத்தில் தூங்கிக் கொண்டிருந்த 4 குழந்தைகள் செங்கல் சூளையின் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு டிச.22 செங்கல் சூளையின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த குழந்தை தொழிலாளிகளான சூரஜ் (9), நந்தினி (5), விவேக் (9) மற்றும் 3 மாத குழந்தையான நிஷா ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், 5 வயது சிறுமி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.