கர்நாடக மாநிலத்தின் உடுப்பியில் இளைஞர் ஒருவர் நேற்று (டிச. 22) பேருந்து டயரை கழற்றி காற்று நிரப்பி கொண்டிருந்தார். அப்போது திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் டயர் வெடித்தது. இதில் அந்த இளைஞர் தூக்கி வீசப்பட்டார். இச்சம்பவத்தில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு அதற்கான சிகிச்சை பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.