காங்கோ நாட்டில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 78ஆக அதிகரித்துள்ளது. கிறிஸ்துமஸை கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்கு, புஸிரா நதி வழியே படகில் சுமார் 290 பேர் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தனர். அப்போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 58 பேர் மீட்கப்பட்ட நிலையில், 100க்கும் மேற்பட்டோரை காணவில்லை. இதனால் பலி உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.