திருச்சி விமான நிலையத்தில் கத்தை, கத்தையாக பணம் பறிமுதல்
திருச்சியில் இருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் மலேசியா தலைநகர் கோலாலம்பூர் செல்லவிருந்த பயணிகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியின் பையில் சோதனை செய்த போது அதில் 500 ரூபாய் நோட்டு கட்டுகள் ரூ. 11 லட்சம் இருந்தது. அதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லாததால் அந்த பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்தப் பயணியிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.