உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி திருச்சி நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பி. சுவாமிநாதன் தலைமை வகித்தாா். இதில், அனைத்து நீதிமன்ற நீதிபதிகள், வழக்குரைஞா்கள், உதவி வனப்பாதுகாவலா் சரவணகுமாா், வனத்துறையினா், சட்ட தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.