துறையூர் கொலை வழக்கில்
18 மாதங்கள் தலைமறைவாக இருந்த குற்றவாளியை பிடித்த போலீசார் - திருச்சி எஸ் பி ரிவார்டு வழங்கி பாராட்டு.
திருச்சி மாவட்டம், துறையூர் மலையப்பன் சாலை பகுதியை சேர்ந்த கண்ணையன் என்பவர் கடந்த 2023 ஆண்டு புதிதாக வீடு கட்டியுள்ளார். வீட்டின் கட்டிடப் பணியில் பீகாரை சேர்ந்த சிந்து என்கின்ற சோட்டு, சச்சின் என்கின்ற சச்சின்குமார் இருவரும் வேலை செய்துள்ளனர். இவர்களுக்கு கட்டிட மேற்பார்வையாளர் மேற்கு வங்கத்தை சேர்ந்த தரம்சர்மா என்பவர் முறையாக கூலி வழங்கவில்லை என கூறப்படுகிறது. இரண்டு மாத கூலியை கேட்டு தாக்கியதில் தரம் சர்மா உயிரிழந்தார்.
இதையடுத்து இருவரும் தப்பி ஓடி தலைமறைவாகினர். கொலை வழக்கில் தொடர்புடைய சச்சின்குமார் 18 மாதங்களுக்குப் பிறகு திருச்சிக்கு ரயிலில் வந்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சச்சின்குமாரை கைது செய்தனர்.
இதையடுத்து நேற்று முசிறிக்கு வந்த திருச்சி மாவட்ட போலீஸ் எஸ். பி செல்வ நாகரத்தினம் முசிறி டிஎஸ்பி அலுவலகத்தில் துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையன்,
சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார், போலீசார் குகன் மற்றும் முனுசாமி ஆகியோருக்கு வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
அப்போது முசிறி போலீஸ் டிஎஸ்பி சுரேஷ்குமார் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.