திருச்சி மாவட்டம் தொட்டியம் அரங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் யோகநாதன் இவரது மகள் கவிதா (வயது 46) மனவளர்ச்சி குன்றியவர். இந்நிலையில் கடந்த 19 ந்தேதி திருச்சி கீழப்பஞ்சபூர் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு கவிதா வந்திருந்தார். இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது தந்தை யோகநாதன் எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.