மகாராஷ்டிரா மாநிலம் உஜல்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் 13 வயது சிறுவன். இவரது தாய், ஓய்வுபெற்ற காவலரின் வீட்டில் உதவியாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுவனும் கடந்த ஜனவரி 31ஆம் தேதி அந்த ஓய்வுபெற்ற காவலரின் வீட்டிற்கு வேளைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் அலமாரியில் இருந்த காவலரின் துப்பாக்கி மற்றும் சில தோட்டாக்களை திருடிக்கொண்டு சென்ற சிறுவன், நண்பர்களுடன் சேர்ந்து மேய்ச்சல் நிலத்தில் வைத்து 20 முறை சுட்டுள்ளான். தகவல் அறிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.