திருவாரூரில் அமைந்துள்ள தனது பூர்வீக கிராமமான திருவீழிமிழலையில் இளைய மகன் பவனுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் காதணி விழா நடத்தினார். சிவகார்த்திகேயனுக்கு ஒரு மகள், இரண்டு மகன் உள்ளனர். சொந்த ஊருக்கு வந்திருந்த சிவகார்த்திகேயனுடன் கிராம மக்கள் ஆர்வமுடன் போட்டோக்களை எடுத்துக்கொண்டனர். 'அமரன்' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு SK 23, பராசக்தி (SK 25) படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.