முசிறி அருகே மனநலம் பாதிக்கப்பட்டவர் தற்கொலை
முசிறி அருகே உள்ள ஜமபுநாதபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கையன் வயது 40. சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவம் நடந்த நேற்று வீட்டில் யாரும் இல்லாத வேலையில் மின்விசிறி கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவருடைய தாய் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற ஜம்புநாதபுரம் காவல் நிலைய போலீசார் அவரது உடலை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.