ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் உள்ள பேட்டரிகள் தரம் குறைவாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ஐதராபாத்தை சேர்ந்த சுனில் என்பவர் ஓலா நிறுவனத்திற்கு பலமுறை புகார் அளித்தும், நிறுவனம் சரியாக பதில் அளிக்காததால் அவர் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரித்த நீதிமன்றம் அந்த நிறுவனத்திற்கு ரூ.1.73 லட்சம், நுகர்வோரின் மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரமும் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.