சென்னை வளசரவாக்கம் பகுதியில் குழந்தை தொழிலாளர்கள் உட்பட ஐந்து கொத்தடிமைகளை போலீசார் இன்று (நவ. 05) மீட்டுள்ளனர். வளசரவாக்கத்தில் உள்ள திருப்பதி நகரில் ரஷிதா என்பவர் வீட்டில் இருந்த 5 பேரை அதிகாரிகள் மீட்டதாக தெரியவந்துள்ளது. ரேஷ்மா என்ற பெண் 6 வருடங்கள் பணிபுரிய ஒன்றரை லட்ச ரூபாய் மற்றும் 17 வயது சிறுமி 3 வருடங்கள் பணிபுரிய ரூ.3 லட்சம் முன்பணம் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.