வீட்டில் இருந்து வேலை செய்பவர்களை விட அலுவலகத்தில் இருந்து பணிபுரிபவர்களின் மனநலன் நன்றாக இருப்பதாக அமெரிக்காவை சேர்ந்த சேப்பியன்ஸ் லேப்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள 54,000 ஊழியர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக 13% இந்தியர்கள் கையாள முடியாத அளவு பணிச்சுமைக்கு ஆளாக்கப்படுவதாக இந்த ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.