இன்றைய காலத்தில் உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை பலரும் அறிந்துள்ளனர். இதனால் ஜிம்முக்கு சென்று தங்கள் உடலை அழகுபடுத்த நினைக்கின்றனர். ஆனால் ஆர்வ மிகுதியால் சிலர் சிறு வயதிலேயே ஜிம்முக்கு செல்கின்றனர். இந்தப் பழக்கம் அவர்களை விரைவான முதுமை தோற்றத்திற்கு வழி வகுப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே பள்ளி முடித்து, உடல் முழுமையான வளர்ச்சியடைந்த பின்பு 18 - 20 வயதில் தான் ஜிம்முக்கு செல்ல வேண்டுமென நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.