தற்போது பல விஷயங்களை ஆன்லைன் மூலம் கற்றுக் கொள்ளலாம். குறிப்பாக யோகா, உடற்பயிற்சி போன்றவையும் ஆன்லைன் வழியாக சொல்லித் தரப்படுகிறது. ஆனால் யோகாவை ஆன்லைன் மூலம் கற்றுக் கொள்ள வேண்டாம் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இதில் ஏதேனும் தவறு நடந்தால் பக்க விளைவுகள் ஏற்படும். எனவே யோகா செய்ய விரும்புபவர்கள் ஒரு குருவை சந்தித்து அவரது நேரடி கண்காணிப்பில் பயில வேண்டியது அவசியம்.